Monday, October 07, 2013

உஷா-பான சிகிச்சை | Water Therapy

ஆறு டம்ளர் (1.5 லிட்டர்) சுத்தமான தண்ணீரை தினசரி குடித்தால், டாக்டர், பரிசோதனை, மருந்து, மாத்திரை, ஊசி எதுவுமே தேவையில்லை... வியாதிகள் பறந்தோடி விடும். நீங்களே சுயபரிசோதனை செய்து கொண்டாலன்றி, இதை நம்பமாட்டீர்கள்...

"Water Therapy | வாட்டர் தெரபி" எனப்படும், இந்த சிகிச்சை முறையால், தலைவலி, ரத்தக் கொதிப்பு, ஹைபர் டென்ஷன், ரத்தசோகை, மூட்டு வலி, தசைவலி, தலை கிறுகிறுப்பு, இருமல், ஆஸ்துமா, நெஞ்சுச் சளி, டி.பி., மெனிஞ்சிட்டீஸ், சிறுநீரகக் கல், அசிடிட்டி, வாயுத் தொல்லை, சீதபேதி, மலச்சிக்கல், சர்க்கரை வியாதி, கண்நோய், மாதவிடாய் பிரச்னைகள், வெள்ளை அணு குறையும் பிரச்னை, பெண்களின் கர்ப்பப்பை, மார்பகப் புற்றுநோய் என, மொத்தம் 31 வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.

அதிகாலையில் எழுந்தவுடன் பல் விளக்காமல், முகம் கழுவாமல், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். எத்தனை கிளாஸ் தண்ணீர், 1.5 லிட்டர் ஆகும் என்பதை, முன்னமே அளந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை முறையை, "உஷா (அதிகாலை) பான சிகிச்சை" எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர் நம் முன்னோர்.

ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்து முடித்தபின் தான் பல் விளக்கி, முகம் கழுவ வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும், பின்னும் ஜூசோ, வேறு எந்த உணவோ சாப்பிடக் கூடாது. முந்தைய இரவில், மது அருந்தியிருந்தால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது.
உங்கள் ஏரியாவில் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லையென்றால், நீரைக் காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.

எல்லாம் சரி... ஒன்றரை லிட்டர் தண்ணீரை, ஒரே நேரத்தில் குடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா... குடிக்க முடியும்! இரண்டு, மூன்று நாட்கள் திண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பதுபோல், பழக, பழக சுலபமாகி விடும்.
ஆரம்பத்தில், நான்கு கிளாஸ் தண்ணீரை அடுத்தடுத்து குடியுங்கள். இரண்டு நிமிடம், இடைவெளி விட்டு, மீதமுள்ள இரண்டு கிளாசை குடியுங்கள். இவ்வளவு தண்ணீரையும் குடித்தபின், ஒரு மணி நேரத்துக்கு இரண்டு, மூன்று முறை சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும்... கொஞ்ச நாட்களுக்குப் பின், சகஜ நிலை வந்து விடும்.

சோதனை செய்து பார்த்ததிலும், பயிற்சி செய்ததிலும் கீழ்க்கண்ட வியாதிகள் எத்தனை நாட்களில் குணமாகி உள்ளன என்று, கண்டறியப்பட்டுள்ளது...
* மலச்சிக்கல் — ஒரு நாள்
* அசிடிட்டி — இரண்டு நாள்
* சர்க்கரை நோய் — ஏழு நாள்
* ரத்தக்கொதிப்பு, ஹைபர் டென்ஷன் — நான்கு வாரம்.
* கேன்சர் — நான்கு வாரம்.
* டி.பி., — மூன்று மாதம்.

ஆர்த்தரிட்டீஸ், ருமாட்டிசம் நோய் உள்ளவர்கள், காலை, பகல், இரவு என, மூன்று வேளையும், உணவுக்கு ஒரு மணி நேரம் முன், ஒரு வாரம் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின்னர், காலை, இரவு என, இருவேளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த சிகிச்சை, மனித உடலை சுத்தப்படுத்துகிறது. புதிய ரத்தம் உடலில் உற்பத்தியாக உதவுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில், "ஹெமட்டோ போயிசிஸ்" என்கின்றனர். இந்த சிகிச்சை பெருங்குடலை சுத்தப்படுத்தி, நன்மை பயக்கிறது. சுத்தமான ரத்தமே நோய்களை குணப்படுத்தி, மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
— இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"அலோபதி டாக்டர்கள், ஒருவருக்கொருவர் தமக்குள்ளே ஒத்துப் போக மாட்டார்கள்... அவர்களிடம் இருந்து, அர்ச்சனை கிடைக்கப் போகிறது உனக்கு..." என, இதைப் படித்து பார்த்த லென்ஸ் மாமா கூறினார். ஆப்ட்ரால் தண்ணீர் தானே... செலவு கிடையாது; முயற்சித்துப் பாருங்களேன்...

Credits: To my friend, for this message. 
Citation: <Needed>

Sunday, October 06, 2013

Lyrics, I Loved.. [3]

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை,
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை,
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா..
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா..
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்...

#Na. Muthukumar for Kedi Billa Killadi Ranga